சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்த பிரபல பாடகிக்கு போட்டியாளர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணமிகு மேடை..! பலர் முன்னிலையில் பிரபல பாடகிக்கு போட்டியாளர் கொடுத்த கட்டாய முத்தம்! வாயை பிளந்த நடுவர்கள்!
பொதுவாகவே சிறியவர் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. தமிழைப் போலவே பல மொழிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக பிரபல பாடகி நேஹா கக்கர் பங்கேற்று இருந்திருக்கிறார்.
அப்போது போட்டியாளர் ஒருவரை பார்த்து என்னை நினைவிருக்கிறதா ? என்று கட்டிப் பிடித்து உள்ளார் பாடகி நேஹா . உடனே அதற்கு அந்த போட்டியாளர், பிரபல பாடகி நேஹாவை கட்டிப்பிடித்து முத்தம் அளித்துள்ளார். அதாவது நடுவராக பங்கேற்ற நேஹா, போட்டியாளர் ஒருவர் பாடிய பாடலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவரை பாராட்டுவதற்காக மேடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போட்டியாளரை கட்டிப்பிடித்து வாழ்த்தியுள்ளார். அப்போது அத்துமீறி அந்த போட்டியாளர் பாடகி நேஹாவை முத்தமிட்டு உள்ளார்.
இந்த சம்பவம் நடைபெறும்போது அங்கிருந்த தொகுப்பாளர் ஒருவர் இதனை தடுக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் அந்த போட்டியாளர் பாடகி நேஹாவிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம் அங்கிருந்த அவர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சம்பவம் அடங்கிய நிகழ்ச்சியின் புரோமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்களின் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.