செய்தியாளர்கள், பத்திரிகையாளர்களை சாலையிலேயே நிறுத்தி ரஜினி பேட்டி அளித்து வருகிறார் வீட்டுக்குள் கூட அனுமதிப்பதில்லை என்று புகார் கூறப்பட்டு வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவு அதிரடியாக அமைந்துள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு 7 ஸ்டார் ஓட்டலில் நாளை பிரியாணி விருந்து! களம் இறங்கிய ரஜினி! காரணம் என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகை பொறுத்தவரை பத்திரிகையாளர்களை நடிகர் ரஜினிகாந்த் எதிர்கொள்ளும் விதமே அலாதியானது. ஒரு கால கட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கும் ரஜினிக்கும் ஏழாம் பொருத்தம். தற்போது மட்டும் அல்ல ரஜினி திரையுலகில் முன்னேறிக் கொண்டிருந்த காலத்திலும் அவர் என்ன செய்தாலும் செய்தியானது.
ரஜினி செல்லும் இடமெல்லாம் பத்திரிகையாளர்கள் பின் தொடர்வார்கள். இதனால் அவ்வப்போது ரஜினி - செய்தியாளர்கள் மோதல் ஏற்படுவது உண்டு. இதன் காரணமாக ரஜினி குறித்து செய்தியாளர்கள் முன்விரோதத்தில் தவறான தகவல்களை பரப்ப ஆரம்பித்தனர். ரஜினிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது என்கிற வகையில் கூட செய்திகளை வெளியிட்டு பழி தீர்த்தனர்.
ஆனால் 1990களுக்கு பிறகு ரஜினி செய்தியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தை மாற்றிக் கொண்டார். அதுநாள் வரை செய்தியாளர்களை பார்த்தால் விரட்டி விரட்டி அடிப்பேன் என்று கூறி வந்த ரஜினி 1990களில் பத்திரிகையாளர்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து தனது வீட்டிற்கு அழைக்க ஆரம்பித்தார். அப்போது செய்தி சேகரிக்க ரஜினி வீட்டிற்கு சென்றால் ஒரு செய்தியாளருக்கு அப்போதே 5 ஆயிரம் ரூபாய் வரை கொடுப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு.
இந்த பணத்தை செய்தியாளர்கள் அனைவரும் வாங்கியது இல்லை. நேர்மையான பத்திரிகையாளர்கள் அப்போதும் இருந்தனர். அதன் பிறகு ஒரு கட்டத்தில் செய்தியாளர்களை சந்திப்பதையே ரஜினி தவிர்க்க ஆரம்பித்தார். ஆனால் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள ரஜினி கூறியது முதல் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
இதற்காக ரஜினி தனது வீட்டிற்கு அருகே செய்தியாளர்கள் காத்திருப்பதை பார்த்து இரக்கப்பட்டு பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். இது தான் விமர்சனத்திற்கு ஆளானது. ரஜினி பத்திரிகையாளர்களை மதிப்பது இல்லை. செய்தியாளர்கள் அமர நாற்காலி கூட கொடுப்பது இல்லை. கேட்டை திறந்த வெளியே வந்து பத்திரிகையாளர்களை சாலையிலேயே சந்தித்துவிட்டு சென்றுவிடுகிறார் என்ற கூறப்பட்டு வந்தது.
இப்படியான சூழலில் தான் ரஜினி நாளை (12-03-2020) செய்தியாளர்களை சந்திக்கிறார். இதற்காக சென்னையின் பிரமாண்ட 7 நட்சத்திர ஓட்டலான லீலா பேலஸ் புக் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காஸ்ட்லியான ஓட்டல் என்றால் அது லீலா பேலஸ் தான். இங்கு ஒரு நபர் அன்லிமிடெட் சாப்பாடு சாப்பிட 5 ரூபாய் வரை சார்ஜ் செய்கிறார்கள்.
இந்த அளவிற்கு காஸ்ட்லியான ஓட்டலில் செய்தியாளர்களுக்கு விருந்து வைக்கும் ஒரே நடிகர், ஒரே அரசியல் தலைவர் ரஜினி தான் என்று கூறலாம். ரஜினி தனது மகள் சவுந்தர்யாவிற்கு திருமணத்தை கூட லீலா பேலசில் தான் நடத்தினார். செய்தியாளர்களை சாலையில் நிற்க வைக்க வேண்டும் என்பது தனது நோக்கம் அல்ல, அவர்களுக்கு 7 நட்சத்திர விடுதியில் விருந்து வைக்கும் அளவிற்கு உயர்வான இடத்தில் தான் வைத்திருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தவே இந்த எற்பாடாம்.
செய்தியாளர் சந்திப்பிற்கு பிறகு அங்கேயே செய்தியாளர்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டன் பிரியாணி முதல் ஏராளமான அசைவ உணவுக்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாம்.