ரஜினி வீட்டிற்குள் மோப்ப நாய்களுடன் திடீரென நுழைந்த போலீசார்! நள்ளிரவில் பரபரப்பு!

நடிகர் ரஜினி வீட்டிற்குள் மோப்ப நாய்களுடன் திடீரென போலீசார் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா  இல்லத்திற்கும் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொலைபேசி மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ரஜினி மற்றும் ஜெயலலிதா வீட்டில் சற்று நேரத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறியுள்ளார்.

 

இதனை அடுத்து வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் ரஜினி மற்றும் ஜெயலலிதா வீட்டிற்குள் நள்ளிரவில் நழைந்தனர். விடிய விடிய சோதனை நடைபெற்றது. சோதனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது புரளி என்று தெரியவந்தது.

 

செல்போன் எண்ணை கொண்டு ஆராய்ந்த போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கோயம்புத்தூரைச் சேர்ந்த முகமது அலி என்று தெரியவந்துள்ளது. மன அழுத்தத்தின் காரணமாக மிரட்டல் விடுத்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

 

ஆனாலும் முகமதுஅலியிடம் கோவை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரஜினி வீட்டிற்குள் நள்ளிரவில் போலீசார் மோப்ப நாய்களுடன் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

பிறகு வெடிகுண்டு புரளி என்று தெரியவந்த பிறகே அப்பகுதியில் உள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். சோதனையின் போது ரஜினி வீட்டில் தான் இருந்துள்ளார்.