எவ்வளவோ கெஞ்சினேன்! அவன் சரிப்பட்டு வரல! கல்யாணம் நின்னுடுச்சி! கலங்கும் ரோஜா பிரியங்கா! அதிர்ச்சி காரணம்!

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா.


தமிழில் பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா ஆவார். தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவர் தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். 

ஆனால் தமிழில் ரோஜா சீரியலில் நடித்த பின்பு தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே சின்னத்திரையில் கிடைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. அப்பேர்ப்பட்ட பெருமையையும் புகழையும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவுக்கு பெற்றுத் தந்தது.

ஒருபுறம் சந்தோஷத்தில் இருக்கும் பிரியங்கா மறுபுறம் சோகத்திலும் ஆழ்ந்திருக்கிறார். சமீபத்தில் ராகுல் என்பவருடன் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம் திருமணம் பந்தத்தில் முடிவடையும் என்ற எதிர்பார்த்த நிலையில் தற்போது ராகுலுடன் திருமணம் நடைபெறாது என்று சோகத்துடன் கூறுகிறார் நடிகை பிரியங்கா. 

கடந்த ஒரு வருட காலமாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆனால் எதிர்பாராத விதமாக இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து இருந்தனர்.

அவர்களுடைய கருத்து வேறுபாட்டை சரி செய்வதற்காக எவ்வளவோ முயற்சி செய்தும் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது . இதனிடையே வெளிநாடு சென்ற தனது காதலனை திரும்பி வா நாம் சேர்ந்து வாழலாம் என பிரியங்கா வெளிப்படையாக அழைத்தும் பார்த்தார்.

ஆனார் ராகுல் வரவில்லை. இதனையடுத்து இருவரும் விலகி விடலாம் என்று முடிவு செய்து பிரிந்து வாழ்வதாக நடிகை ப்ரியங்கா பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.