தமிழ் மொழியில் உருவாகும் காமசூத்ரா வெப் சீரிஸ்! ஹீரோயின் யார் தெரியுமா?

சன்னிலியோன் காமசூத்ரா என்ற வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார்.


நடிகை சன்னிலியோன் தமிழ் , ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது தமிழ் சினிமாவில் வீரமாதேவி என்னும் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் கோக்ககோலா , ஹெலன் , தீனா மூனா போன்ற பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சன்னிலியோன்.

தற்போது நடிகை சன்னி லியோன் மேலும் ஒரு புதிய வெப்சீரிஸில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.  ஏக்தா கபூர் தயாரிக்கும் காமசூத்ரா என்கிற வெப்சீரிஸில் நடிக்க உள்ளார். காமசூத்ரா என்பது ஆதி காலம் மக்களால் எழுதப்பட்ட வாழ்வியல் சம்பந்தப்பட்ட ஒரு நூலாகும். இந்த நூலை அடிப்படையாகக் கொண்டுதான் காமசூத்ரா வெப்சீரிஸ் எடுக்கப்பட உள்ளது.

இந்த காமசூத்ரா நாடகம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ஆங்கிலம் என பல மொழிகளில் எடுக்கப்பட உள்ளது. இந்த காமசூத்ரா தொடரில் சன்னிலியோன் நடிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை ஆனால் விரைவில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .