மனைவியை அருகே வைத்துக் கொண்டு நடிகையுடன் படுக்கை அறையில் பிரபல நடிகர் செய்த செயல்! யார், என்ன தெரியுமா?

இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி நடிப்பில் இருட்டு என்ற திகில் திரைப்படம் இயக்குனர் துரையால் இயக்கப் பட்டு இந்த மாதம் ஆறாம் தேதி திரைக்கு வர உள்ளது


இருட்டு திரைப்படத்தை பற்றி சுந்தர் சி அவர்கள் பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க பயப்படுகிற மாதிரி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் நானும் இயக்குனர் துரையும் இந்த படத்தை தொடங்கினோம். இயக்குனர் துரை மிகவும் சிறப்பாக இந்த இருட்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் ஒரு வித்தியாசமான பேய் படமாக இருக்கும். நானே படத்தைப் பார்த்து பல காட்சிகளில் மிரண்டு விட்டேன். ஒவ்வொரு காட்சியிலும் படம் பார்ப்பவர்களை சீட் நுனிக்கு இழுக்கும். இருட்டு திரைப்படத்தில் கதையின் தேவைக்கேற்ப போல முத்தகாட்சி மற்றும் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. 

இந்த படத்தில் படுக்கையறை காட்சிகளை படமாக்கும்போது எனது மனைவி குஷ்பு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து இருந்தார். படுக்கை அறை காட்சியில் இயக்குனர் அதிக டேக்குகள் எடுத்து படமாக்கினார். என் மனைவியை அருகில் வைத்துக் கொண்டு படுக்கை அறை காட்சியில் நடித்தது மிகவும் தர்மசங்கடமாக இருந்தது எனவும் சுந்தர் சி கூறியுள்ளார்.