கூகுள் தமிழர் சுந்தர் பிச்சை, பேஸ்புக் ஜூக்கர்பெர்குக்கு 20 வருட சிறை தண்டனை..?வருகிறது புதிய சட்டம்!

சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க் ஆகியோர் 10 அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமூக வலைத்தளங்களில் "பிரைவசி" என்று அழைக்கப்படும் தனிநபர் ரகசியம் காக்கும் பணியிலிருந்து தவறினால் மோசமான தண்டனைகளை அளிப்பதற்கான மசோதாவை அமெரிக்க பாராளுமன்றத்தில் செனட்டரான ரான் வைடன் முன்மொழிந்தார்.

ஜூன் மாதத்தில் தனிநபர் தகவல் காக்கும் சட்டத்தில் இருந்து விலகி எதற்காக பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. தகவல் திருட்டு நடைபெறுவதை கண்டறிந்தோம் ஃபேஸ்புக் நிறுவனமும் அதன் பயனர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்காத காரணத்தினால், மத்திய வர்த்தக கமிஷன் ஃபேஸ்புக் நிறுவனம் மீது 34,500 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

சென்ற மாதத்தில் சிறார் தனி உரிமை சட்டத்தை மீறிய குற்றத்திற்காக யூடியூப் நிறுவனத்திற்கு 170 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 

புதிதாக முன்மொழிந்த சட்ட மசோதா குறித்து பேசிய ரான் வைடன், "அமெரிக்க மக்களின் தனியுரிமையை மார்க் ஜூக்கர்பெர்க் போன்றவர்கள் எந்நிலையிலும் காப்பாற்றி எண்ணியதில்லை. அவர்களால் என்னுடைய சட்ட மசோதா இயற்றப்பட்ட பிறகு அவ்வாறு இருக்க முடியாது. தனிநபர் உரிமை மீறலில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நிறுவன தலைவர்கள் 10 அல்லது 20 ஆண்டுகள் சிறையில் கழிக்க நேரிடும்" என்று ஆவேசமாக உரையாற்றினார்.

இந்த சட்டமானது ஏற்றப்பட்டால் மார்க் ஜூக்கர்பெர்க், சுந்தர் பிச்சை ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற சர்ச்சை வெளியாகியுள்ளது.