வயிற்றில் பூச்சி, புழுவை அழிக்க சுண்டைக்காய் போதுமே ??

கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்ததாக கருதப்படும் சுண்டைக்காயை பல்லாண்டு காலமாக தமிழர்கள் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். இதனை காயாக உணவில் சேர்த்துக்கொள்வதும், காயவைத்து வற்றலாக பயன்படுத்துவதும் நல்ல பலன் தருகிறது.


அடர் பச்சை நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை மட்டுமே வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். இது லேசாக கசப்புத்தன்மை கொண்டது. வெளிர் நிறத்தில் இருக்கும் சுண்டைக்காயை வற்றல் செய்து உபயோகம் செய்யலாம்.

·         வயிற்றில் இருக்கும் புழுக்களை அழித்து, ஜீரணம் சம்பந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் நீக்குகிறது.

·         தொடர்ந்து சுண்டைக்காய் வற்­றலை சாப்­பிட்­டு ­வந்தால் உடல் சூட்டால் ஏற்­படும் ஏப்பம், வயிறு விழுதல், வயிற்றுவலி மற்றும் வயிறு தொடர்­பான நோய்கள் நீங்கும்.

·         தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு நீங்கவும் சுண்டைக்காய் உதவி செய்கிறது.

·         பசியின்மை, ருசியின்மை போன்ற குறைபாடுகளை நீக்கும் தன்மையும் சுண்டைக்காய்க்கு உண்டு.

சுண்டைக்காயை காயவைத்து இடித்து பொடியாக்கி, மோரில் போட்டு தினமும் குடித்துவர மந்தம், செரியாமை போன்ற பிரச்னைகள் முற்றிலுமாக கட்டுப்படும்.