கொரோனா நிவாரணம்..! அள்ளிக் கொடுத்த சன் டிவி..! ஆனால் ஊழியர்களுக்கு ஒரு நாள் சம்பளம் கட்..!

கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ. 10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் கடந்த சில நாட்களாகவே அதி வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 5500 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல தமிழ்நாட்டில் சுமார் 700 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில் கொரோனா மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கடந்த சில நாட்களாகவே பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ. 10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 அதோடு மட்டுமல்லாமல் சன் டி.வி. குழுமத்தில் பணிபுரியும் 6 ஆயிரம் பேரின் ஒருநாள் ஊதியமும் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்கு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புலம்பெயர்த்த தொழிலாளர்களுக்கு உதவிபுரிந்து வரும் தன்னார்வ அமைப்புகளுடன் சன் குழுமம் இணைந்து பணியாற்றும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.