மரண காட்டு காட்டிய வார்னர், பரிஸ்டோவ்! ரஸ்ஸலை பிளான் போட்டு தூக்கி மாஸ் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.


டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 159 ரன்களை மட்டுமே எடுத்தது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிறப்பான பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரன்களை குவிக்க முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணியில் கிறிஸ் லின் மட்டும் 51 ரன்களை எடுத்தார். சன் ரைசர்ஸ் அணியின் கலீல் அஹ்மத் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பரிஸ்டோவ் அதிரடியாக விளையாடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 38 பந்துகளில் 67 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.பரிஸ்டோவ் ஆட்டமிழக்காமல் 43 பந்துகளில் 80 ரன்களை குவித்து சன் ரைசெர்ஸ் அணியை எளிதாக வெற்றி பெற வைத்தார்.