ராஜஸ்தானை பந்தாடிய டேவிட் வார்னர்! சாம்சன் சதம் வீண்.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பட்லர் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ரஹானே உடன் இணைந்து எதிரணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 

சிறப்பாக விளையாடிய ரஹானே ரன்களை 70 எடுத்து ஆட்டமிழந்தார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலமாக சஞ்சு சாம்சன்  55 பந்துகளில் 102 ரன்களை குவித்து ஐபிஎல் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 198 ரன்களை குவித்தது. 

பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியின் தொடக்கம் முதலே ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். அந்த அணியின் டேவிட் வார்னர் 69 ரன்களும், பரிஸ்டோவ் 45 ரன்களும் எடுத்து சன் ரைசர்ஸ் அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

விஜய் ஷங்கர் 15 பந்துகளில் 35 ரன்களை அதிரடியாக அடித்து சன் ரைசர்ஸ் அணியை எளிதாக வெற்றி பெற உதவினார். இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்க்கு இலக்கை எட்டியது. இதனால் சன் ரைசர்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.