சன் ரைசர்ஸ் அணியை கட்டுப்படுத்திய டெல்லி பவுலர்ஸ் ! டெல்லியின் பைனல் கனவு நினைவாகுமா?

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான பிலே ஆஃப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 162 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் 19 பந்துகளுக்கு 36 ரன்களை விளாசினார். மனிஷ் பாண்டே 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். மிடில் ஓவர்களில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி சன் ரைசர்ஸ் அணியின் ரன் விகிதத்தை குறைத்தனர்.

எனினும் பின்னர் களமிறங்கிய விஜய் ஷங்கர் 11 பந்துகளுக்கு 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய கீமா பால் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.