மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ipl போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வி அடைந்ததால் பிலே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அந்த அணி இழந்தது. இதனை நெட் ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிலே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக முன்னேறியுள்ளது.
பிலே ஆஃப் இல் சென்னையுடன் மோதும் மும்பை அணி! டெல்லியுடன் மோதும் அணி எது?
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி , மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்திலும், சென்னை அணி 2 வது இடத்திலும், டெல்லி அணி 3 வது இடத்திலும், சன் ரைசர்ஸ் அணி 4வது இடத்திலும் உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள Qualifier 1 சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.eliminator 1 போட்டியில் டெல்லி அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.