அடிச்சி தூக்கிய டேவிட் வார்னர்! சன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்குமா KXIP?

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி  சன் ரைசர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய பரிஸ்டோவ் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.பின்னர் களமிறங்கிய விஜய் ஷங்கர் டேவிட் வார்னருடன் இனைந்து ரன்களை சேர்த்தார். 

எனினும் இந்த ஜோடி ஒரு நாள்  போட்டியை போல ஆடி, அதிரடியாக ரன்களை குவிக்க தவறினர்.விஜய் ஷங்கர் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் அவுட் ஆகாமல் 70 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.இதனால் சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எடுத்தது.

151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கிங்ஸ் XI பஞ்சாப் சேஸ்  செய்து வருகிறது