சன் பிக்சர்ஸ் தயாரிப்பு..! பி.வாசு டைரக்சன்! ரஜினியின் சந்திரமுகி 2 அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாக இருக்கிறது என நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய மைல் கல்லாக இருந்தது. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தை இயக்குனர் பி.வாசு இயக்கியிருந்தார்.

தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்கப் போவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வாசு இயக்க உள்ளார். மேலும் இந்த திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராகவாலாரன்ஸ் நடிக்க உள்ளதாக அவர் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் தன்னுடைய தலைவர் திரைப்படத்தில் தான் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ராகவா லாரன்சின் இந்த அறிவிப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.