திருமணமாகி ஒரே மாதம்! தாலியை கழட்டி வைத்துவிட்டு ஆஃபிஸ் வந்த சன்டிவி அனிதா சம்பத்!

திருமணமாகி ஒரு மாதம் கூட முழுமையாக ஆகாத நிலையில் சன்டிவி அனிதா சம்பத் தனது தாலியை கழட்டி வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சன்டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தனது 3 வருட காதலரை கடந்த மாதம் கரம் பிடித்தார். திருவள்ளூரில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை.

இந்த நிலையில் அனிதா சம்பத் நேற்று முதல் சன்டிவியில் மீண்டும் பணிக்கு திரும்பினார். இரவு செய்தியை அவர் வாசித்த போது அய் புதுப்பொண்ணு வந்துருக்கு என்று பலரும் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால் அவரது கழுத்தில் தாலி இல்லாததை பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர். என்னடா இது? திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் அனிதா தாலியை கழற்விட்டார் என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் சமூக வலைதளங்களிலும் அனிதா தாலியை கழட்டி வைத்தது சர்ச்சையானது. பலரும் ஒரு தமிழ்ப் பெண் இப்படி இருக்கலாமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் அனிதாவின் குடும்ப உறுப்பினர்கள் கூட அவர் தாலியை கழட்டியது குறித்து அதிர்சசி அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து அனிதா விளக்கம் அளித்துள்ளார். செய்தி வாசிக்கும் போது மதத்தின் அடையாளங்கள் தெரியக்கூடாது என்பதால் குங்குமம், தாலி போன்றவற்றை தான் பயன்படுத்துவதில்லை என்று அவர் கூறியுள்ளார். மற்றபடி வேறு ஒன்றும் சீரியசாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.