ஒரே ஒரு போட்டோ! விஜயுடன் நடிக்கும் சன் டிவி அனிதா!

தீபாவளியன்று சன் டிவி ஆன்கர் அனிதா சம்பத் வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் அவருக்கு விஜய் அட்லி கூட்டணியில் வெளியாகும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சன் டிவியில் மாலை ஆறு மணிக்கு செய்தி வாசிக்கும் அனிதாவை தெரியாதவர்கள் சமூக வலைதளங்களில் இருக்க முடியாது. இதே போல் தினமும் காலை அனிதா தொகுத்து வழங்கும் வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியும் இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலம். சன்டிவி ஆறு மணி செய்தியையும், வணக்கம் தமிழகம் நிகழ்ச்சியையும் அனிதாவுக்காக பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது.

 

   இந்த நிலையில் அனிதா தீபாவளியன்று செய்தி வாசிப்பதற்கு முன்னதாக எடுத்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று செம வைரல் ஆனது. அக்மார்க் தமிழ் பொன்னாக அந்த புகைப்படத்தில் ஜொலித்த அனிதாவை யார் என்று கேட்டு ஏராளமான தொலைபேசி அழைப்புகளே சன் டிவிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் அனிதா சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருவது தெரியவந்துள்ளது.

 

   மேலும் 2.0 திரைப்படத்தின் டிரெய்லரில் கூட செய்தி வாசிப்பாளராக மூன்று நொடிகள் மட்டும் அனிதா வருவார். புகைப்படம் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனிதாவின் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்தது. இதனால் ட்விட்டரில் கூட அனிதா புதிதாக ஒரு கணக்கை ஆரம்பித்து புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

 

   இந்த நிலையில் தனக்கு நடிகர் விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக அனிதா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து விஜய் ரசிகர்கள் பலரும் அனிதாவை வாழ்த்தி வருகின்றனர். ஒரே ஒரு புகைப்படம் மூலம் விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அனிதாவுக்கு கிடைத்துள்ளது அவருடன் பணியாற்றுபவர்களுக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

More Recent News