சன் டிவி கண்மணி சீரியலில் நடிக்கும் சௌந்தர்யா யார் தெரியுமா? அசர வைக்கும் தகவல்!

தற்போது திரைப்படங்களுக்கு கிடைக்கும் அதே அளவிற்கான அந்தஸ்து தொலைக்காட்சி செயல்களுக்கும் கிடைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்ன அந்தஸ்து கிடைக்குமோ அதே அளவு அந்தஸ்து அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் முழுமையாக போய் சேர்கிறது. இதனால் தான் மக்களை கவருவதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கண்மணி சீரியல் மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எப்போதுமே சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்ற ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று கூற வேண்டும். 

இந்த சீரியலில் நடிகர் சஞ்சீவ் , கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இவருக்கு ஜோடியாக லீலா எக்லஸ் என்பவர் சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துவருகிறார். நடிகை லீலா எக்லஸ் கண்மணி சீரியல் நடிப்பதற்கு முன்பாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக தான் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பிரியமுடன் பிரியா, திருப்புமுனை, சிரிக்க விடலாமா போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை திரைப்படங்களில் நடித்த போதும் தனக்கு சரியான அங்கீகாரம் தமிழ் சினிமாவில் கிடைக்காததால் சோர்ந்துபோன நடிகை லீலா தமிழ் சினிமாவின் சின்னத்திரையில் கண்மணி சீரியல் மூலம் கால்பதித்தார். 

சீரியல் ஒளிபரப்பான சிலநாட்களிலேயே நடிகை லீலாவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உருவானது. பெரிய திரையில் கிடைக்காத பேரும் புகழும் சின்னத்திரையின் மூலம் சம்பாதித்து விட்டார் நடிகை லீலா எக்லஸ்.