மழை மேகம் தண்ணீர் வளர்க்க மறந்து விட்டால் தாவரங்கள் தரைக்குள்ளே வேர் நீட்டி தண்ணீர் தேடுமேயன்றி தற்கொலை செய்துகொள்ளுமா? – என்று ஒரு பெயர் தெரியாத கவிஞர் தற்கொலையை ஏளனம் செய்திருப்பார்.
தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான்… யாருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என தெரியுமா?
மழை மேகம் தண்ணீர் வளர்க்க மறந்து விட்டால் தாவரங்கள் தரைக்குள்ளே வேர் நீட்டி தண்ணீர் தேடுமேயன்றி தற்கொலை செய்துகொள்ளுமா? – என்று ஒரு பெயர் தெரியாத கவிஞர் தற்கொலையை ஏளனம் செய்திருப்பார்.
உண்மைதான். நம்பிக்கை வேர் இல்லாத தருணங்களில் தற்கொலை எண்ணம் உதயமாகிவிடுகிறது. தற்கொலை என்றால் என்ன தெரியுமா?
தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் செயலே தற்கொலை . வேறு எந்தத் தூண்டுதலும் இல்லாமல் உயிர் விடுதல் தற்கொலை எனப்படுகிறது. தன்னால் பிரச்னைகளில் இருந்து தப்ப முடியாது.
மற்றவர்களுக்கு ஒரு சுமையாக வாழும் இந்த
வாழ்க்கை தேவையற்றது. உயிர் வாழ்வது வீண் என்று நினைப்பவன் தற்கொலை செய்து கொள்ள முன்வருகிறான்.
தற்கொலை ஓர் நோய், உணர்ச்சி வசப்படுகிற கணநேர முடிவு. இது வாழ்க்கைச் சிக்கலை எதிர்த்து நிற்கும் திறமை இன்மையின் வெளிப்பாடு. இது ஒரு கணத்தில் முடிவு எடுப்பதாக இருந்தாலும், இந்த சிந்தனை நீண்ட நாட்களாக மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு.
தற்கொலை பற்றி செய்திகள் வரும்போது, இந்த எண்ணம் உள்ளவர்கள் ஆர்வமாகப் படிப்பார்கள். இந்த சிந்தனையை மலிவு சரக்குகளை விலைபேசும் பத்திரிக்கைகள், திரைப்படங்கள், சில அரசியல் சக்திகள் இதை தூண்டிவிடுவது வருந்தத்தக்கது.
தற்கொலை பெரும்பாலும் இருவர் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
காதலர், காதலியாகவோ, கணவன், மனைவியாகவோ, பெற்றோர், குழந்தை, தலைவன், தொண்டனாக, கடன் கொடுத்தவர், கடன் வாங்கியவர் என்று இருக்கலாம்.