ச்சீ..ச்சீ..! இப்டிலாமா டிரஸ் போடுவீங்க? ஆடை சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்!

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகளான சுகானா கான் சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மகள் சுகானா தான் எப்பொழுதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இவர் தற்போது தன்னுடைய விடுமுறை நாட்களை கோலாகலமாக நியூயார்க்கில் தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார். அப்போது தன் தோழிகள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

நேற்றைய தினம் சுகானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தோழிகளுடன் இணைந்து சிரிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அந்தப் புகைப்படத்தில் சுகானா காண் கையில் காப்பி மக் வைத்துக்கொண்டு தன் தோழிகளுடன் இணைந்து சிரிக்கும் விதமாக அமைந்திருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டபடி கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர் . காரணம் அவர் அணிந்திருந்த உடை தான். 

தன் உடல் அங்கங்களை அப்படியே வெளிப்படையாக தெரியும் அளவிற்கு அணிந்திருந்த உடையை பார்த்த ரசிகர்கள் சுகானாவை கண்டபடி கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர் அதில் ஒருவர் நீங்கள் முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்கள் . நீங்கள் இவ்வாறு செய்வது சரியல்ல எனவும் கமெண்ட் செய்திருந்தார்

மேலும் ஒரு ரசிகர் உங்கள் உடல் அங்கங்களை மற்றவர்களுக்கு காட்டுவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் நன்றாக உடை அணிந்தால் இன்னும் மிகவும் அழகாக இருப்பீர்கள் எனவும் கமெண்ட் செய்திருந்தனர். சுகன கான் இதற்கு முன் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் இதேபோல் சுகானா கானை வறுத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.