திடீரென வாரிசு நடிகர் கொடுத்த வாய்ப்பு..! தேடி வந்த மாப்பிள்ளையை துரத்திவிட்டு மங்கலகரமான நடிகை எடுத்த முடிவு! கோடம்பாக்கம் கிசுகிசு!

பட வாய்ப்புகளில் இல்லாததால் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடித்த நடிகை லட்சுமி மேனனுக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அந்த எண்ணத்தை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன் தமிழ்த் திரையுலகில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக 'சுந்தர பாண்டியன்' என்ற படத்தில் அறிமுகமானார். 15 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர் படிப்பிலும் கவனத்தை செலுத்தி வந்தார். முதல் படத்திலேயே இவருக்கு பிலிம்பேர், தமிழ்நாடு விருதுகள் கிடைத்தது. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய, 'கும்கி' படத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய லட்சுமி மேனனுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்தது.

இதையடுத்து குட்டி புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன் போன்ற பல படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசியாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 2016ம் ஆண்டு ரெக்க படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு பட வாய்ப்பு இல்லாததால் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்றார். அங்கு நடனப்பள்ளி நடத்தி வந்தார். இதற்கிடையே இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். நடிகை லட்சுமி மேனனும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த நிலையில் தற்போது விக்ரம் பிரபு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

உடனே இதுதான் சாக்கு என திருமண முடிவை லட்சுமி மேனன் கைவிட்டுவிட்டடாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சினிமா வாய்ப்பு வந்ததால் மாப்பிள்ளையை கழட்டி விட்டதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.