திடீரென பிடிக்காமல் போன பிரேக்..! அசுர வேகத்தில் பல்டி அடித்த கார்..! உள்ளே இருந்த போலீஸ்காரருக்கு ஏற்பட்ட கதி! சுங்குவார்சத்திரம் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த காவலர் பரிதாபமாக உயிரிழந்தார்.


சென்னை ஜாம்பஜார் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் ஆயிரம் விளக்கை சேர்ந்த துரைராஜ். இவரும் செய்யாறு காவல் நிலைய மதுவிலக்கு பிரிவு ஏட்டு சன்னிலயாத் இருவரும் செய்யாறில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே சேந்தமங்கலம் என்ற பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைப்புற கவிழ்ந்ததுடன், சாலையோர பள்ளத்தில் விழுந்தது.

கார் அப்பளம் போல நொறுங்கி விட்டது. இந்த கோர விபத்தில் காவலர் துரைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ஏட்டு சன்னிலாயத் படுகாயங்களுடன் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். உடனடியாக திரண்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

துரைராஜ் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை காலியாக இருந்ததால் வாகனத்தை அதிகவேகமாக ஓட்டிவந்ததே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. மிதமான வேகத்தில் வந்திருந்தால் ஒருவேளை டயர் வெடித்திருந்தால் கூட சமாளித்துக்கொண்டு காரை உடனே நிறுத்தியிருக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.