சாத்தான்குளம் தந்தை - மகன் ஜட்டியை கூட போலீஸ் விடவில்லை! பிரபல பாடகி சுசித்ரா வெளியிட்ட பகீர் தகவல்!

சாத்தான்குளம் தந்தை மகன் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து பாடகி சுசித்ரா சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.


சாத்தான்குளத்தில் அரசடி வினாயகர் கோயில் தெரு அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜ் (வயது 58) என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு பென்னிக்ஸ் (வயது 32) என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி ஊரடங்கு விதிகளை இவர்கள் பின்பற்றாமல் கடையைத் திறந்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதைப்பற்றி தகவல் அறிந்ததும் அவரது மகன் பென்னிக்ஸ் தந்தையை பார்ப்பதற்காக அந்த காவல் நிலையத்திற்கு சென்று விடுகிறார்.

 காவல் நிலையத்தில் போலீசார் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அவரது மகன் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இதனைத்தொடர்ந்து பென்னிக்ஸ்க்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி விடவே அங்கு அவரை போலீசார் காவல்நிலையத்தில் இருக்க வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஜெயராஜும் அவரது மகனும் இறந்து விட்டதாக செய்தி மட்டும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து பலரும் இந்த சம்பவத்திற்கு தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் அவர்களுக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வகையில் சினிமா திரைப்படங்களில் பின்னணி பாடகியாக வலம் வரும் சுசித்ரா, இவர்களின் உயிரிழப்புக்கு நியாயம் கோரி புதிய வீடியோ பதிவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில், நான் ஒரு தென்னிந்தியர், தென் இந்தியாவில் நடைபெறும் பல பிரச்சினைகள் வெளிவராததற்கு காரணம் இந்த பிரச்சனைகளை நாம் ஆங்கிலத்தில் பேசாமல் இருப்பது தான் என்று நான் நம்புகிறேன். 

ஆகையால் இந்த வீடியோ பதிவில் நான் ஆங்கிலத்தில் உரையாட உள்ளேன். மேலும் இந்த வீடியோ பதிவில் சாத்தான் குலத்தை சேர்ந்த ஜெயராஜுக்கும் அவரது மகனுக்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றி கூற உள்ளேன். இவர்கள் தென்னிந்தியாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் வசித்து வருபவர்கள். இவர்கள் இருவரும் எந்த தவறும் செய்யாத அப்பாவிகள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடைபெற்றுள்ளது. முதலில் அவர்களது முழங்கால்கள் போலீசாரிடம் இருக்கும் லட்டியால் முற்றிலுமாக சேதபடுத்தப்பட்டுள்ளது. அடுத்து அவர்களின் முகங்கள் சுவற்றில் பல முறை முட்ட பட்டுள்ளன. மேலும் அவர்கள் இருவரையும் முழுமையாக நிர்வாணப்படுத்தி உள்ளாடைகள் கூட கொடுக்காமல் அப்படியே லாக்கப்பில் தள்ளியுள்ளனர்.

மேலும் அவர்கள் இருவரையும் முழுமையாக நிர்வாணப்படுத்தி அவர்களின் ஆசனவாய் வழியாக லத்தியை உள்ளே செலுத்தி துன்புறுத்தியுள்ளனர். இம்மாதிரி அவர்கள் பலமுறை செய்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரையும் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதியில் கொண்டு சென்று அடைத்து இந்த சித்திரவதையை செய்துள்ளனர். அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரது பிறப்புறுப்புகளும் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் அவர்களின் நெஞ்சு முடிகளையும் கைகளால் பிடிங்கு உள்ளனர் என்பதையும் அவர் கூறியிருக்கிறார். 

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த சித்திரவதையை போலீசார் செய்துகொண்டிருந்த பொழுது அவர்களின் உடல் மொத்தமும் ரத்தத்தில் நனைந்ததால் மூன்று முறை அவர்கள் மாற்று துணியை அவர்களின் குடும்பத்தினரிடம் கேட்டுள்ளனர். அவர்களும் மீண்டும் மீண்டும் மூன்று முறை புதிய துணிகளை கொண்டு வந்து கொடுத்து உள்ளனர். இதற்கு பின்பு போலீசார் அவர்கள் இருவரையும் மாஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தியுள்ளனர். மாஜிஸ்ட்ரேட் காவலில் எடுத்து இருவரையும் விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார். இதன் அடிப்படையில் மீண்டும் அவர்களை போலீசார் தங்களது கஸ்டடியில் எடுத்து உள்ளனர்.

கஸ்டடியில் எடுத்த இரண்டு நாட்களுக்கு பின்பு அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இவர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக ஒருவருக்கு நெஞ்சுவலி என்றும் மற்றவருக்கு காய்ச்சல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ் பேசும் லோயர் மிடில் கிளாஸ் ஐ சேர்ந்த உழைப்பாளிகள் ஆவர். சம்பவத்தை அடுத்து இரண்டு போலீசார்கள்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மற்ற போலீசார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது ஒன்றும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஜஸ்டிஸ் கிடையாது. உயிரிழந்த இருவருக்கும் சரியான நீதி கிடைக்க வேண்டும் ஆகையால் இந்த வீடியோவை தமிழ் அல்லாமல் பிற மொழி பேசும் மக்களும் பார்க்கும் விதத்தில் உங்களுடைய ஸ்டோரியில் பகிர்ந்து அவர்களுக்கு நீதி கிடைக்க உதவி செய்யுங்கள் என்று சுசித்ரா கூறியிருக்கிறார். தற்போது சுசித்ரா வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவானது சமூக வலைதளங்களில் பல நெட்டிசன்கள் பகிரப்பட்டு வருகிறது