ஆண்களுக்கு மட்டும் தான் அது இருக்கிறதா? பெண்களுக்கு இல்லையா? நாங்கள் காட்டக்கூடாதா? பிரியங்கா சோப்ராவுக்கு குவியும் ஆதரவு!

ஆண்கள் தொப்பையை காட்டினால் தவறு இல்லையா? பெண்கள் தொப்பை காட்டினால்தான் தவறா ? என நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.


நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் இணைந்து கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவர் மிகவும் கவர்ச்சிகரமான உடையில் காணப்பட்டார். அப்போது நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துகொண்டார் பிரியங்கா சோப்ரா.

பொதுவாகவே கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் ஆடை அணிவதில் பிரியங்காசோப்ரா வல்லவர். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது அணிந்திருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வழக்கத்தைவிட மிகவும் அதிர்ந்து போனார்கள் என்று தான் கூற வேண்டும். இந்த புகைப்படத்தை பார்த்த அவர்கள் பிரியங்கா சோப்ராவை சமூக வலைத்தள பக்கத்தில் மூலம் கடுமையாக விமர்சித்தனர்.

ரசிகர்களின் இந்த கடும் விமர்சனத்தை அடுத்து ஒரு சிலர் தங்களுடைய ஆதரவையும் பிரியங்கா சோப்ராவுக்கு அளித்தனர் . பாலிவுட் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் சேகர் கபூரின் மனைவி சுசித்ரா. பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தின் மூலம் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

சுசித்ரா அந்த பதிவில், பிரியங்கா சோப்ரா தன்னுடைய தொப்பையை மறைக்க வில்லை என்பதே அந்த புகைப்படம் மிக அழகாக காட்டுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று கூறியிருக்கிறார். அவர் ஒவ்வொரு பெண்ணுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் ராக் ஸ்டாராக வலம் வருகிறார் எனவும் கூறியுள்ளார். ஒரு பொது வெளியில் நிகழ்ச்சியில் பிரியங்கா இப்படியாக உடை அணிந்து வந்து இருப்பது பெண் விடுதலையின் உயரம் என்று தான் கூற வேண்டும்.

நான் இதுவரை அவரது ரசிகையாக இருந்ததில்லை .ஆனால் இந்த படத்திற்கு பின்பு அவருடைய தீவிர ரசிகையாக நான் மாறிவிட்டேன். பெண்களின் வீரம் அவர்கள் அணியும் உடையில் இல்லை அவர்களின் திறனிலும் அறிவிலும் தான் அமைந்திருக்கிறது என்பதை வெளிக்காட்டியவர் பிரியங்கா சோப்ரா. 

ஒருவேளை ஆண் இம்மாதிரியான உடை அணிந்து வந்தால் அவரது தொப்பையை பற்றி உங்களால் கிண்டல் அடிக்க இயலுமா? ஆனால் அதுவே ஒரு பெண் இவ்வாறாக உடை அணிந்து வரும் போது அதை கமெண்ட் அடிப்பது ஏன்? எனவும் சுசித்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் உங்களது நம்பிக்கையை பெறவேண்டும் பிரியங்கா என்று சுசித்ரா அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.

 சுசித்ரா வெளியிட்டுள்ள இந்த புதிய பதிவு சமூக வலைத்தளத்தில் மிகப் பெரிய ஆதரவைப் பெற்று வருகிறது. மேலும் இந்த பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.