நான் தான் பரமசிவன்! முட்டாள் நீதிமன்றங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது! நித்தியின் புதிய வீடியோ வைரல்!

யார் நினைத்தாலும் என்னை கைது செய்ய இயலாது என்று சாமி நித்தியானந்தா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத் நகரில் பெண்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமி நித்தியானந்தா மீது சில நாட்களுக்கு முன்னர் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு தொடங்கியவுடனே நித்யானந்தா தலைமறைவானார். சில நாட்கள் கழித்து அவர் "கைலாசம்" என்ற தனிநாட்டை நிறுவியுள்ளதாகவும், இந்த நாட்டிற்கு தனி பாஸ்போர்ட், தலைநகர் ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது அவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். "அந்த வீடியோவில் அவர், என்னை யாராலும் கைது செய்ய இயலாது. இதை முட்டாள்தனமான இந்திய நீதிமன்றங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். 

இதைப்பற்றி இந்திய தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், "நித்யானந்தா தான் அடி முட்டாள். நாங்கள் தெளிவாகவே உள்ளோம். அவர் மீது உள்ள குற்றச்சாட்டை விரைந்து விசாரிப்பதற்கு திட்டமிட்டு வருகிறோம். அவர் வெறும் ஒரு இணையதளத்தை உருவாக்கிவிட்டு, நாட்டையே உருவாக்கி விட்டதாக புலம்பி கொண்டிருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது நாட்டிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.