ஏழை மக்களின் பேரிடர் களைவதற்கான ஆய்வுக் கூட்டம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், இன்று சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கூட்ட அரங்கில், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய அலுவலக மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.


 இந்த ஆய்வு கூட்டத்தில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் - பயனாளிகள் தாங்களாகவே மேற்கொள்ளும் கட்டுமானம் (தனி வீடுகள்) மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுதல், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் உறைவிட மேம்பாட்டு திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் நகர்ப்புற ஏழை எளியவர்களுக்கான பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைக்கத்தக்க வீட்டு வசதி திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, மேற்கண்ட திட்டப்பணிகளை உரிய காலக் கெடுவிற்குள் விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தினார்கள்.

இக்கூட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் அரசு முதன்மை செயலாளர் திரு. ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., இணை மேலாண்மை இயக்குநர் திரு.ச சுந்தர ராஜ், இ.ஆ.ப., வாரியத் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள், மற்றும் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.