எக்சாம்ல காப்பியா அடிக்குறீங்க..! மாணவர்கள் தலையில் அட்டைப் பெட்டியை மாட்டிவிட்ட கல்லூரி! எங்க தெரியுமா?

கல்லூரி மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருப்பதற்காக அவர்களுடைய தலையில் கார்ட்போர்ட் டப்பாக்கள் போடப்பட்ட சம்பவமானது கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கர்நாடகா மாநிலத்தில் ஹவேரி என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு பகத் பி.யூ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சதீஷ் என்பவர் வித்தியாசமான முறையில் முடிவெடுத்துள்ளார். 

அதாவது தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் இருப்பதற்காக மாணவ மாணவிகளின் தலைகளில் கார்ட்போர்டு டப்பாக்களை கவிழ்த்துள்ளனர். அந்த கார்ட்போர்ட் டப்பாக்களில் துளைகள் ஏற்படுத்தப்பட்டு பேப்பர்களை மட்டும் பார்ப்பதற்கு போன்ற அமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சம்பவமானது 16-ஆம் தேதியன்று நிகழ்ந்துள்ளது. 

இந்த செய்தியானது புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் பரவியுள்ளது. முன் பல்கலைக்கழக துணை இயக்குனரான பீர்சாடே என்பவர் இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக கல்லூரி நிர்வாகத்தினரும் தொடர்பு கொண்டு நடைமுறையை தடுத்து நிறுத்தியுள்ளார்.

சம்பவம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது