பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை ரத்தா? தீயாய் பரவும் தகவல்! உண்மை என்ன?

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்தானது என்ற செய்தி வதந்தி என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தேர்வுகள் 24-ஆம் தேதி முதல் விடுமுறை என்று ஆண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. 

ஆனால் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை ரத்தென்று செய்திகள் வெளியாயின. 9 நாட்களுக்கு மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகள் பற்றிய வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதனால் பள்ளிகளில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டன.

இதனிடையே குழப்பத்தை போக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. அதாவது காலாண்டு விடுமுறையானது வழக்கம்போல வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் காந்திய சிந்தனைகளை பின்பற்ற விரும்பும்  பள்ளிகள் தாராளமாக வகுப்புகளை நடத்தலாம் என்று கூறியுள்ளது. 

மேலும் வகுப்புகள் நடத்தப்படும் போது விருப்பப்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். விடுமுறை ரத்து என செய்தி முற்றிலும் தவறு என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

இந்த செய்தியானது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.