திடீரென வகுப்பறை மேற்கூரை இடிந்தது! 6 மாணவர்களுக்கு நேர்ந்த பயங்கரம்! திருச்செந்தூர் ஆர்சி பள்ளிக்கூட விபரீதம்!

பள்ளிக்கூடத்தில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் பெயர்ந்து விழுந்ததில் 6 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவமானது தூத்துக்குடியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் பகுதி அமைந்துள்ளது. திருச்செந்தூருக்கு உட்பட்ட அமலிநகர் என்னும் பகுதியில் புதிதாக சென்ற ஆண்டு ஆர்.சி என்ற அரசு உதவி பெறும் பள்ளி  கட்டப்பட்டது. இப்பள்ளியில் கிட்டத்தட்ட 140 பேர் படித்து வருகின்றனர்.

வழக்கம் போல இன்று காலையில் பள்ளி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின்  வகுப்பறையில் திடீரென்று மேற்கூரையில் பூசப்பட்டு இருந்த சிமெண்ட் கீழே விழுந்தது. இதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர்.

பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை உடனடியாக அருகில் இருந்த அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் தொடர்புடைய பள்ளிக்கு விரைந்து வந்தார். பாதிக்கப்பட்ட வகுப்பறையை பார்வையிட்ட அவர் பள்ளியின் தரத்தை குறித்து ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சம்பவமானது அமலிநகரில் இன்று காலை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.