நீங்க போகாதீங்க சார்..! தலைமை ஆசிரியர் கால்களில் விழுந்த மாணவச் செல்வங்கள்! நெகிழ வைக்கும் சம்பவம்!

அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள மனமில்லாத மாணவர்களும் பெற்றோர்களும் கதறி அழுத சம்பவம் மாங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி என்னும் பகுதி அமைந்துள்ளது. மாங்குடி என்னும் கிராமம் அறந்தாங்கிக்கு உட்பட்டதாகும். இங்கு அரசு நடுநிலைப் பள்ளியொன்று அமைந்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிமணி என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பதவியேற்றார். மற்ற அரசு பள்ளிகளை போன்று இருந்த பள்ளியை மாற்றிக்காட்ட வேண்டும் என்ற எண்ணமும் துணிச்சலும் அவரிடம் இருந்தது. மேலும் பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியுடன் அவர் திறம்பட செயல்பட்டு பள்ளியை அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற்றினார். 

திரைக்குப் பின்னிருந்த பள்ளியை நக்கீரன் பத்திரிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. சென்ற ஆண்டு தமிழக அரசு "புதுமை பள்ளி" இன்னும் விருதுக்கு விண்ணப்பிக்க அனைத்து அரசு பள்ளிகளிலும் கூறியிருந்தது. ஆனால் விண்ணப்பிக்காமல் இருந்த மாங்குடி நடுநிலைப்பள்ளி விருதை தட்டிச்சென்றது.

சென்ற வாரம் நடந்த தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் கலந்தாய்வில் ஜோதிமணி பச்சலூர் நடுநிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். நேற்று பிரியாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவரை பள்ளியிலிருந்து செல்லாதீர்கள் என்று பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கதறி அழுதபடி கூறினர்.

ஆனால் அவர், "மாங்குடி நடுநிலைப்பள்ளி தற்போது மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்தான் நான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். நான் சென்னையில் இருக்கும் பச்சலூர் நடுநிலை பள்ளியையும் மாங்குடி பள்ளியை போன்று உயர்த்திக் காட்டுவேன்" என்று கூறினார். 

இறுதியாக பள்ளி வளாகத்திற்கு வெளியே வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி புறப்பட்டார். அவர் புறப்படும் போது வானவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் அழுது கொண்டே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாசப்போராட்டத்தை கண்ட அப்பகுதியினர் பெரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.