15 வயது இளைஞன் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவமானது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை கற்பழிக்க முயன்ற 15 வயது மாணவன்! திருச்சியில் அரங்கேறிய திகில் சம்பவம்!

திருச்சி மாவட்டத்தில் துறையூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. துறையூருக்கு உட்பட்ட மருதை என்னும் கிராமத்தில் பழங்குடியின மலைவாழ் மக்கள் படிப்பதற்காக ஆதிதிராவிட பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகிறார். அவருடைய சொந்த ஊர் செம்புசிலான்பட்டி. பள்ளியிலகருந்து 2 கீ.மீ தொலைவிலுள்ள இவரது ஊருக்கு பேருந்து வசதி எதுவுமில்லை.
திங்கட்கிழமை பள்ளி முடிந்தவுடன் மாலை நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஆசிரியை நடந்து கொண்டிருந்தார். இவர் பயிலும் பள்ளியை சேர்ந்த ஒரு மாணவன் அடர்ந்த வனப்பகுதியினுள் ஆசிரியையை மடக்கியுள்ளான்.
அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை பறிக்க முயன்றதோடு அல்லாமல், அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். ஒருவழியாக அந்த ஆசிரியை இளைஞனிடமிருந்து தப்பித்து தன் ஊருக்கு சென்று பொதுமக்களிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார்.
கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஆதிதிராவிட திட்ட அலுவலரான ரங்கராஜு என்பவரிடம் புகாரளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ரங்கராஜு அந்த கிராமத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் முதற்கட்ட விசாரணையில் குற்றச்செயலில் ஈடுபட்டது சிறுவன் என்பதால் இரு தரப்பினரிடமும் சமரசம் செய்யாமல் இருக்க திட்டம் தீட்டினர். இதை அறிந்த கிராமத்து பொதுமக்கள் ரங்கராஜுவிடம் சென்று எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விசாரித்தனர்.
அதற்கு அவர் துறை சார்ந்த வீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து துறையூர் காவல்நிலையத்திலும் புகாரளிக்குமாறும் பொதுமக்களிடம் கூறினார். பொதுமக்கள் ஒன்று திரண்டு துறையூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். மேலும் கிராமத்தை சேர்ந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இது போன்ற சம்பவங்களிலிருந்து பாதுகாப்பு தரவும் வலியுறுத்தினர்.
இந்த சம்பவமானது துறையூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.