ரூட்டு தல மாணவரை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை! சென்னையில் தொடரும் திகு திகு சம்பவம்!

சென்னையில் இருந்து செல்லும் வழி தொடர்பாக ஏற்பட்ட முதலில் மாணவர் ஒருவரை நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் தீவிரமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சில தினங்களாக சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர்களின் அட்டூழியம் அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக மாணவர்களை துரத்தி வெட்டியுள்ளனர்.

எப்பொழுதும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் செல்லும் பேருந்து வழியை பெருமையாக  பேசிக்கொள்வதை வழக்கமாக கொள்வர். சில முறை இது போன்ற செயல்கள் தேவையற்ற வன்முறைகளுக்கு வழிவகுப்பதாக அமைகின்றன. இன்று இதேபோன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி பலர் கொடுமைப்படுத்துவது போன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவரை குறுப்பிட்ட பேருந்து ரூட்டை புகழ்ந்து பேசுமாறு ஒரு கும்பல் அடித்து துன்புறுத்துகிறது. பின்னர் அந்த மாணவரை அரை நிர்வாணப்படுத்தி கீழே அமர வைத்து பல முறை அவர்கள் செல்லும் வழியை புகழ்ந்து பேசுமாறு பணித்துள்ளனர். அந்த மாணவர் பயந்து கொண்டு அவர்கள் கூறியவாறு பேசியுள்ளார்.

இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை காணும் பொதுமக்கள் மாணவர்கள் செய்யும் அட்டூழியத்தை கண்டு மிகவும் அச்சப்படுவதாக கூறியுள்ளனர். இந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.