பிரின்சிபால் தப்பா நடந்துகிட்டார்னு சொல்லு..! அப்பதான்..! மாணவிக்கு கல்லூரியில் கிடைத்த விபரீத அனுபவம்!

உடற்கல்வியியல் முதல்வர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுக்க வற்புறுத்தப்பட்ட சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவிலேயே மிகவும் பிரபல உடற்கல்வியியல் கல்லூரி நிறுவனமானது ஒய்.எம்‌.சி.ஏ கல்லூரி. இந்த கல்லூரியில் உடற்கல்வியியல் முதல்வராக ஜார்ஜ் வில்லியம்ஸ். இந்த கல்லூரியில் ஜோதி என்ற பெண் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கல்லூரியின் விடுதியின் மெய்க்காப்பாளராக ஷெர்லி என்பவர் பணியாற்றி வருகிறார். 

இவ்விருவருக்கும் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மீது தனிப்பட்ட முறையில் விரோதம் நிலவி வந்தது. இதனை பழி தீர்த்துக்கொள்வதற்காக அதே கல்லூரியில் பயிலும் 2-ஆம் ஆண்டு மாணவியிடம் முதல்வர் மீது பாலியல் புகார் கொடுக்குமாறு ஜோதியும், ஷெர்லியும் கூறியுள்ளனர்.

தமுலில் அந்த மாணவி இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அந்த மாணவியை இருவரும் மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக கொடுமைப்படுத்தியதில் அவர் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார்.

இதனிடையே அந்த மாணவி இந்த சம்பவம் குறித்து ஒரு ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். நான் படும் சிரமங்கள் அனைத்தையும் அந்த ஆடியோவில் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். இந்த ஆடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் நான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த பெண் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனால் அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் தலையிட்டு இதில் நியாயத்தை வழங்குமாறு கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது சென்னை நந்தனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.