தேர்வில் தோல்வி! தவித்த மாணவன்! கண்டுகொள்ளாத உறவுகள்! விரக்தியில் எடுத்த பகீர் முடிவு!

மாதாந்திர தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தேரி எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுபா நந்தினி என்பவர் வசித்துவருகிறார். 17 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்பாராவிதமாக கணவர் உயிரிழந்துவிட்டார். இத்தம்பதியினருக்கு யாகேஷ் என்ற 15 வயது மகனுள்ளார். இவர் நாகர்கோவிலிலுள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

நேற்று பள்ளிக்கு சென்று யாகேஷ் வீடு திரும்பினார்‌ வழக்கம்போல வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது நெடுநேரமாக வீட்டுக்கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்தது. இதனால் பதறிய சுபா வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை வரவழைத்தார். பொதுமக்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். தன் மகன் இறந்து கிடந்ததை கண்டு சுபா கடுமையாக அழுதார். உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மாணவரின் உடலை ஆசாரிபள்ளம் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மாதாந்திர தேர்வில் 2 பாடங்களில் தோல்வியுற்றதால் மனமுடைந்து யாகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 

இந்த சம்பவமானது கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.