2 காதுகளும் கேட்காது..! பள்ளிக்கு செல்ல தண்டவாளத்தை கடந்த சிறுவனுக்கு நேர்ந்த பதைபதைப்பு சம்பவம்!

காது கேட்காத இளைஞர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயிலடித்து இறந்த சம்பவமானது பெருங்களத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெருங்களத்தூரில் காமராஜர் நகரில் என்னும் இடம் உள்ளது. இங்குள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பிரதீப் என்ற இளைஞர் வசித்து வந்தார். இவர் தாம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்கு பிறகு நேற்று காலை 9 மணியளவில் 4 மாணவர்கள் ஏரிக்கரை பகுதி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது ரயிலின் சத்தத்தை கேட்டு 3 மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் பிரதீப்புக்கு காது கேட்காததால் தொடர்ந்து சென்றுள்ளார்.

அப்போது துரதிஷ்டவசமாக பீச் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் அவர் மீது மோதியது. தூக்கி வீசப்பட்ட பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகனின் உடலை பார்த்த பிரதீப்பின் பெற்றோர் கதறி அழுதனர். பிரதீபுடன் கூட பிறந்த 3 பேருக்கும் காது கேட்காதது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது பெருங்களத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.