வேளாண் போராட்டங்களூக்கு கடும் எதிர்ப்பு…. மத்திய அரசு அலுவலங்கள் முன்பாக நவம்பர் 5 போராட்டம்

இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் அடியோடு அழித்தொழிக்கும் வகையில் மத்திய பிஜேபி அரசு வேளாண் விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக, வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020ஐ கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நாடு முழுவதும் நவம்பர் 5ந் தேதி சாலைமறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் மாநில செயற்குழு, நவம்பர் 5ந் தேதி மாவட்ட தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.