ஆபாசக் குப்பையாகும் தி.மு.க. கூடாரம்.... உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம்

தி.மு.க.வுக்கும் கண்ணியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது கருணாநிதி காலத்தில் இருந்தே நடைமுறைதான். அன்னை இந்திரா காந்தியின் தலையில் அடிபட்டு வழிந்த ரத்தத்தைக் கேவலமாகப் பேசியவர்தான் கருணாநிதி.


அவரது பேரனும் அதேபோன்று ஆபாசத்தின் இருப்பிடமாக மாறிவருகிறார். இப்படிப்பட்ட ஒருவரை பிரசாரம் செய்வதற்கு அனுப்பினால், கட்சி எப்படி ஜெயிக்கும் என்பதுதான் தி.மு.க.வினருக்கே பெரும் கவலையாக இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திட்டுவதாக நினைத்து சசிகலா குறித்து ஆபாசமாகப் பேசுகிறார் உதயநிதி. உடனே அதற்கு தி.மு.க.வினரும் கை தட்டுகிறார்கள்.

இந்த விஷயத்துக்கு டி.டிவி.தினகரனே டென்ஷன் ஆகிவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். 

கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.