என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... துர்காவின் கோயில் யாத்திரைக்கு வலுக்கும் எதிர்ப்பு

நெற்றியில் குங்குமம் வைத்திருப்பவரைக் கண்டால், ‘என்னய்யா, நெத்தியில ரத்தமா?‘ என்று கிண்டல் செய்பவர் கலைஞர் கருணாநிதி. ஆனால், அவரே கடைசி காலத்தில் மஞ்சள் துண்டு போட்டதும், சாயிபாபாவை வீட்டுக்கு வரவழைத்து வணங்கியதும் நடந்தன.


ஆனால், இப்போது தி.மு.க. பகுத்தறிவுக் கொள்கையில் இருந்து முழுமையாக விலகியே விட்டது. ஏனென்றால் இந்து விரோத கட்சி என்று தி.மு.க.வை பா.ஜ.க.வினர் தொடர்ந்து கூறி வருவதுதான்.

ஓட்டுக்காக பகுத்தறிவுக் கொள்கையை அடமானம் வைத்துவிட்ட ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் இப்போது வேலை கையில் தூக்கிக் காட்டி நாங்களும் பக்தர்கள்தான் என்று கூறி வருகிறார்கள்.

அதேநேரம், ஸ்டாலின் மனைவி துர்காவோ கோயில் கோயிலாக சென்று சாமி கும்பிட்டு வருகிறார். அதை வீடியோ எடுத்து, போட்டோ எடுத்து தமிழகம் முழுவதும் பரப்பும் பணியையும் செய்து வருகிறார்கள்.

தேர்தல் நெருங்க, நெருங்க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆளுக்கொரு திசையில் அறுபடை வீடுகளுக்கு காவடி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்’று தி.மு.க.வினரே கிண்டலடிக்கிறார்கள்.

ஓட்டுக்காக இப்படியெல்லா பண்றீங்களேம்மா...