ஸ்ட்ராபெரி ஆப்பிளைவிட சத்து நிரம்பியது தெரியுமா?

கவர்ச்சிகரமான நிறமும் வடிவமும் கொண்ட பழமான ஸ்ட்ராபெரி, வித்தியாசமான சுவையும் கொண்டது. ஆப்பிள் பழத்தில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் ஸ்ட்ராபெரியில் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


ஸ்ட்ராபெரியில் வைட்டமின் ஏ, சி, கே, தையமின், நியாசின், போலிக் அமிலம், செம்பு, மாங்கனீஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் போன்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.
• ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிளேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுத்து ஆரோக்கியம் தருகிறது.
• தேவையற்ற கொழுப்பை கரைத்து ரத்த சுத்திகரிப்பு சீராக நடைபெறவும் இதய செயல்பாடு இயல்பாக நடக்கவும் உதவுகிறது.
• ஸ்ட்ராபெரி பழச்சாறு குடித்து வருபவர்களுக்கு பல்லில் உண்டாகும் கறை விரைவில் மறைந்துவிடும்.
• ஸ்டராபெரி சாறு எடுத்து முகத்தில் பூசி குளித்துவந்தால், சூரிய ஒளியால் உண்டாகும் கருமை, கரும்புள்ளி, பரு போன்றவை மறைந்து பளீச் நிறம் தோன்றும்.
செயற்கை கிரீம்கள் பயன்படுத்தி உடலுக்கும் முகத்துக்கும் கேடு விளைவிப்பதற்கு பதிலாக, ஸ்ட்ராபெரி பயன்படுத்தி அழகை பாதுகாப்பது நல்லது.