பிரைவேட் சேட்டிங்குக்கு ரூ.5000 வசூல்! கமிஷ்னர் ஆபீசில் கதறிய டிக் டாக் இலக்கியா!

தன்னுடைய பெயரில் பொய் கணக்குகளை உருவாக்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வரும் செய்தி அதிகரித்து வருவதால் இலக்கியா வீடியோ மூலம் தன்னிலையை தெளிவுபடுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


டிக்டாக் செயலியானது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த செயலியின் மூலம் பல பெண்கள் தங்களுடைய வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இல்லத்தரசிகளும் தங்களுடைய குடும்ப நிலையை மறந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

குடும்பத்தை நிர்வாகிக்கும் பொறுப்புடைய ஆண்களும் இதுபோன்ற வீடியோக்களில் வரும் கனவுக்கன்னிகள் மீது ஆசை ஏற்பட்டு வாழ்விலிருந்து பிறழ்கின்றனர். டிக்டாக்கில் கடந்த சில மாதங்களாக இலக்கியா என்ற இளம்பெண் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். 

தொடக்கத்தில் இவருடைய வீடியோக்களுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்தவித லைக்குகளும் வரவில்லை. இதனால் தான் நடிக்கும் விதத்தை இலக்கியா மாற்றிக்கொண்டார். அரைகுறை ஆடைகளுடன் டிக்டாக் வீடியோக்களில் நடிப்பதை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இலக்கியாவின் பெயரில் பல்வேறு விதமான பொய்க்கணக்குகள் உருவாகின. இந்நிலையில் இரவு நேரத்தில் அரைகுறை ஆடைகளுடன் பிரைவேட்டாக நடனமாடுவதற்கு 5,000 ரூபாய் என்று அந்த பொய் கணக்குகளில், ஒரு வங்கி அக்கவுன்ட் நம்பரும் கொடுக்கப்பட்டிருந்தது.

அதனை நம்பிய பல ஆண்கள் பணத்தை செலவழித்து, அன்றிரவு இலக்கியாவின் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் இலக்கியாவோ அவர்கள் நினைத்து பார்த்தபடி வரவில்லை. பணத்தை செலவழித்து ஆண்மகன்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகினர். 

நாளுக்கு நாள் இலக்கியாவின் பெயரில் பலர் போய் கணக்குகளை உருவாக்கி டிக்டாக் வாசகர்களை ஏமாற்றி வருகின்றனர். இதனால் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இலக்கியா 2 வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது, "கடந்த சில நாட்களாக என் பெயரில் பலர் போலி கணக்குகளை உருவாக்குகின்றனர். அதில் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் அந்த கணக்குகளில் என்னுடைய வீடியோவை பதிவிடுகின்றனர். மேலும் அந்த வீடியோவிற்கு கீழே பல்வேறு விதமான கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர். இதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்னை திட்ட வேண்டுமென்றால் என்னுடைய பக்கத்தில் உள்ள கமெண்ட்ஸில் திட்டி கொள்ளுங்கள். தயவுசெய்து என்னுடைய பெயரை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடாதீர்கள்" என்று ஒரு வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்‌.

மற்றொரு வீடியோவில், "போலி கணக்குகளினால் ஏமாற்றப்பட்ட பலர் என்னுடைய கணக்கிற்கு வந்து, உங்கள் பெயரில் என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறுகின்றனர். தயவுசெய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். என்னுடைய வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் என்னிடம் உள்ளது. இதனால் நான் யாரையும் ஏமாற்றி பணம் பறித்து வாழ வேண்டிய அவசியமும் இல்லை. மேலும், நான் பதிவிடும் எந்த வீடியோவிலும் கருத்துக்களை போட மாட்டேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த 2 வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.