காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உடனடியாக நிறுத்து... சீறுகிறார் தொல்.திருமாவளவன்..!

அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக 6,200 ஏக்கர் நிலங்களும் 80 கிராமங்களும் அழியும் அபாயத்தில் உள்ளன. இதனால் லட்சகணக்கான மக்கள் வெள்ள அபாயத்தில் அவதிக்குள்ளாகலாம். 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடும் என்று எச்சரிக்கை குரல் கொடுத்திருக்கிறார் திருமாவளவன்.


மேலும் அவர், ஒட்டுமொத்த தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் மோடி கும்பலின் பினாமியான அதானி குழுமத்தின் இந்த விரிவாக்க செயல்பாட்டை தடுத்தும் நிறுத்த வலியுறுத்தி இன்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் பழவேற்காடு பகுதியை பார்வையிட்டார். 

செங்கழுநீர் மேடு- கழிவேலி, கோரக்குப்பம் உள்ளிட்ட கிராம மக்களை சந்தித்தார். இதற்கான ஏற்பாடுகளை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. தோழர் சுந்தர்ராஜன் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஊடகவியலாளர்களிடம் தலைவர் திருமாவளவன் பேசும் போது, இந்த துறைமுக விரிவாக்கத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இதனால் மீனவமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இது குறித்து நாடாளுமன்றத்தில் கட்டாயம் குரல் கொடுப்பேன். சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க எல்லாவகையிலும் முயற்சி செய்வோம் என்றார்.