ரோஜா, ஜென்டில்மேன் நாயகி மதுபாலா! 50 வயதில் எப்படி இருக்கிறார் தெரியுமா?

நடிகை மதுபாலா வெளியிட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


1990-களில் மிகவும் பிரபலமான ஹீரோயின்களில் நடிகை மதுபாலாவும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர். கோலிவுட் திரையுலகில் அழகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குதர் மணிரத்னத்தின் ரோஜா என்ற திரைப்படத்திலும், ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்திலும் இவருடைய நடிப்பானது பாராட்டப்படும் வகையில் அமைந்திருந்தது.

அடுத்த சில ஆண்டுகளில் திருமணம் நடைபெறவே திரைப்படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயா டிவியில் சீரியல் இன் மூலம் மீண்டும் நடிப்பிற்கு வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இவர் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். "அனைவருக்கும் ஹலோ. இது உங்கள் மதுபாலா. நான் லண்டனில் இருந்து பேசுகிறேன். கூடிய விரைவில் இந்தியாவிற்கு வந்து உங்கள் அனைவருக்கும் ஹலோ சொல்வேன்" என்று பேசியிருந்தார்.

இந்த வீடியோவை கண்ட பலரும் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜென்டில்மேன் படத்தில் இருந்து அதே பொலிவுடன் மதுபாலா வால் எப்படி 2019 இலும் இருக்க முடிகிறது என்று வியக்கின்றனர்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.