தங்கம் விலை குறைஞ்சுபோச்சு! இனியும் வெயிட் பண்ணாதீங்க!

தமிழ்நாட்டில் தங்கம் விலை பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது.


கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது.

இந்த மாதம் 1ஆம் தேதி 24 கேரட் தங்கத்தின் விலையானது 31 ஆயிரத்தைக் கடந்து விட்டது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் இந்த மாதத்தில் தங்கம் விலை அவ்வப்போது அதிகரித்தும் சரிந்தும் காணப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் சற்று இறக்கம் காணப்பட்டு தான் வருகிறது. இதையடுத்து, இன்றும் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை 1 கிராமுக்கு ரூ. 3,855 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 30,840 ஆகவும், 22 கேரட் தங்கத்தின் விலையானது 1 கிராமுக்கு ரூ.3,692 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 29,536 ஆகவும் இருந்தது.

ஆனால் இன்று சவரனுக்கு 272 ரூபாய் குறைந்து 22 கேரட் தங்கத்தின் விலையானது 3,658 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29,264 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராம் ரூ.3,821 ஆகவும் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 30,568 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை நிலவரம் கீழ்வருமாறு: 6.11.2019 - 1 grm – Rs. 3821/-, 8 grm – 30,568/- ( 24 கேரட்) 6.11.2019 – 1 grm – Rs. 3658/-, 8 grm – 29,264/- (22 கேரட்) வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.10 ஆகவும் கிலோ ரூ.49,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது..