ஸ்டாலின் மருமகன் சபரீசன் வழக்கு தள்ளுபடி..! நீதிமன்ற அதிரடி

பொள்ளாச்சி பெண்கள் கூட்டு பலாத்கார விவகாரத்தில் திட்டமிட்டு அ.தி.மு.க. மீது அவதூறு கிளப்பப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் செயல்படுவதாக தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொள்ளாச்சி ஜெயராமன், இந்த சம்பவத்தில் ஆதாரம் ஏதுமின்றி தன்னை சம்பந்தப்படுத்தி பேசியதற்காக, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக ரூ. 1 கோடி இழப்பீடு கோரி சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கில் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், நக்கீரன் கோபால் உள்ளிட்டோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். உடனே, இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி சபரீசன், நக்கீரன் கோபால், கலைஞர் டிவி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இன்று அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் மானநஷ்ட வழக்கு தொடர முகாந்திரம் இருப்பதாகக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தது. இது ஸ்டாலினுக்கும் அவரது மருமகனுக்கும் பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது.