பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ஸ்டாலின் போராட்டம்.

ஏழை, எளிய மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நாள் தோறும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் உயர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், இதை பற்றி ஆளும் மத்திய அரசு கொஞ்சமும் கவலையே படவில்லை.


வரலாறு காணாத பெட்ரோல் - டீசல் விலை, சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டும் காணாமலும் இருக்கும் அ.தி.மு.க. - பா.ஜ.க. அரசுகளைக் கண்டித்தும் - கலால் வரியை ரத்து செய்து விலை குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வலியுறுத்தியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 22-ஆம் நாள் (திங்கள்கிழமை) அன்று காலை 9 மணி அளவில், கழக மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர், வணிகர்கள், சரக்கு போக்குவரத்து தொழிலில் உள்ளோர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைவரையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அழைக்கிறேன் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.

இனியாவது அரசு விலையைக் குறைக்குமா?