நெல்லிக்காய் மூட்டை போல் சிதறுகிறதா தி.மு.க. கூட்டணி?- கவலையில் ஸ்டாலின் குடும்பம்.

இன்னும் நான்கே மாதங்கள்தான், ஆட்சிக்கு வந்துவிடுவோம் என்று ஸ்டாலின் உறுதியாகக் கூறிவந்த கனவு, கிட்டத்தட்ட உடைந்தேபோய்விட்டது என்பதுதன இன்றைய நிலைமை.


ஆம், சொந்த சின்னம் விவகாரத்தில் குட்டிக் கட்சிகளுக்கும் மானம், ரோஷம் வந்து சீறத் தொடங்கிவிட்டன. 

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வின் வைகோ குறித்து எல்லோருக்குமே தெரியும். அவர் எங்கேயும் நிலையாக நிற்பவர் அல்ல. ஆனால், இந்த தேர்தலில் தன்னுடைய பவரை காட்ட நினைக்கிறார். ஆம், 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் இதற்கு ஸ்டாலினிடமிருந்து பாசிட்டிவ்வான பதில் எதுவும் கிடைக்கவில்லை.. இதனால் வைகோ மிகுந்த அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதனால்தான் கோபத்தில் துணை ஜனாதிபதியை சந்தித்து தனக்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையையும் காட்டியிருக்கிறார் வைகோ.

மதிமுகவை போலவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கட்சி இரட்டை இலக்க எண்களிலேயே இடங்கள் தர வேண்டும் என திமுகவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக தலைமை இதைக் கொஞ்சமும் காதில் வாங்காதது, திருமா தரப்பை சூடேற்றியிருக்கிறது..

இதே மாதிரியான அதிருப்தி குரல், பாரிவேந்தரின் ஐஜேகேவிலும் எதிரொலிக்கிறது.. சொந்த சின்னம் வைத்துள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் போன தேர்தலை விட மிகக் குறைந்த அளவு இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதால் அந்த கட்சிகளும் கொதிப்பில் இருக்கின்றன. 

இப்படி ஒவ்வொரு கட்சியும் கடும் கொந்தளிப்புடன் இருக்கும் காரணத்தால், எந்த நேரமும் கூட்டணிக் கட்சிகள் தெறித்து ஓடும் நிலையே தென்படுகிறது.