டாக்டர் பூங்கோதையின் தற்கொலை முயற்சி… காலில் விழுந்து அழும் பூங்கோதையை காப்பாற்ற மாட்டாரா ஸ்டாலின்?

தி.மு.க. என்றாலே உட்கட்சி பிரச்னை எக்கச்சக்கம் என்பதும், கொலை, அடிதடி எல்லாம் சகஜம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். அது, பூங்கோதையின் தற்கொலை முயற்சி அளவுக்குச் சென்றது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.


பூங்கோதை கடந்த காலத்தில் இருந்தே கனிமொழியின் ஆளாக கருதப்பட்டு வருகிறார். ஆகவே, அவருக்கு வரும் தேர்தலில் சீட் கொடுக்காமல், அவரது தம்பிக்கு சீட் கொடுப்பதற்கு தி.மு.க. தலைமை முடிவெடுத்துள்ளது.

இந்த விவகாரம் உச்சகட்டத்தை அடைந்த நிலையில்தான், சமீபத்தில் நடந்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், பூங்கோதை நேற்று ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து அழும் காட்சி மனதை உருக வைத்தது

தி.மு.க.வுக்கு நிழலாய் நின்ற ஒருவனின் மகள் , அதுவும் நீண்ட காலம் உழைத்த ஒரு பெண்மணி , நிச்சயம் எம்பியாய் பதவி உயர்வுடன் எங்கோ உயர இருக்க வேண்டிய பெண்மணி அதுவும் டாக்டர் ஒரு வார்டு பூத் கமிட்டி பிரச்சினையில் கண்டவன் காலில் விழுவதா என்று கட்சியினர் கடும் டென்ஷனில் இருக்கிறார்கள்.

தா.கிருட்டினன் முதல் எத்தனையோ பேரை தன் சொந்த நலனுக்காக பலிகொடுத்த கட்சி இப்பொழுது பூங்கோதையின் கழுத்தையும் நெறிக்கின்றது. ஸ்டாலின், உதயநிதி இதுகுறித்து வாய் திறக்காதது ஏன் என்பதுதான் கேள்வி.