சொன்னதை செய்ய மாட்டாரே ஸ்டாலின்..? ஆயிரம் ரூபாய் அவநம்பிக்கையில் பொதுமக்கள்.

திருச்சியில் பேசிய ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்துவிட்டார். ஆனால், சொன்னதை செய்வது ஸ்டாலினுக்குத் தெரியாதே, அதனால் நம்பி ஓட்டுப் போட முடியாது என்பதுதான் மக்களின் சிந்தனையாக இருக்கிறது.


கொரானா பேரிடர் உதவி, பொங்கல் தொகை' என ஒவ்வொரு குடும்பத்துக்கும் எடப்பாடி பணம் கொடுத்த நேரத்தில், அதனை தடுத்து நிறுத்த முயன்றவர்தான் ஸ்டாலின். அவர்தான் இப்போது ரேஷன் கார்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று அறிவித்துள்ளார்.

இப்போது ஸ்டாலின், "நாங்கள் இன்னும் ஒரே மாதத்தில் ஆட்சிக்கு வந்து விடுவோம்! எங்கள் ஆட்சியில், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும், ரேசன் கடை வாயிலாக ரூ.1000-ஐ மாதம் தோறும் வழங்குவோம்" என்று சொல்லி இருக்கிறார்.

அதாவது , 2.05 கோடி குடும்ப அட்டைகளுக்கு, மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கினால், மாதம் தோறும் 2050 கோடி தேவை. அதாவது, வருடத்துக்கு 24,600 கோடி ரூபாயை வழங்குவார்களாம்.! அப்போ 5 ஆண்டுகளுக்கு 2,95,200 கோடி தேவைப்படும்..

இதுவும் அந்த 2 ஏக்கர் வாக்குறுதி மாதிரிதான்.... சொல்லுவாங்க செய்யமாட்டானாக.. வடிவேல் பாணியில் சொல்வதென்றால் 'அது வேற வாயி' .. இது நாற வாயி'. 'சதுரங்க வேட்டை படத்தில் ஆசையை தூண்டி ஏமாற்றுவது போல்' பொய்யான வாக்குறுதிகளை கூறி, ஆசை வார்த்தை காட்டி, மக்களை ஏமாற்ற தயாராகி விட்டார்கள் என்பதுதான் மக்களின் கருத்தாகவே இருக்கிறது.

உஷார் மக்களே...