சிறுபான்மை மக்களின் ஆதரவாளர் என்று தன்னை காட்டிக்கொள்ளும் ஸ்டாலின்.! இஸ்லாமியர்களை கைவிட்டது ஏன்..?

சிறுபான்மை மக்களின் ஆதரவாளர் என்று தன்னை காட்டிக்கொள்வதில் ஸ்டாலினுக்கு நிகர் அவரேதான். ஆனால், கட்சி என்று வந்துவிட்டால், இஸ்லாமியர்களை பக்கத்திலேயே சேர்ப்பதில்லை.


அதனால்தான், இஸ்லாமியர்கள் யாருக்குமே கட்சியில் உயர் பதவிகள் கொடுக்கவில்லை என்று சிறுபான்மை மக்கள் டென்ஷன் ஆகிறார்கள். சமீபத்தில் பதவி உயர்வுபெற்ற துரைமுருகன், டி.ஆர்பாலு, பொன்முடி, ஆ.ராசா போன்ற எல்லோருமே இந்துக்கள் மட்டும்தான். 

திமுக தொடங்கப்பட்ட காலம் முதல் அந்தக் கட்சியை ஆதரித்து வந்தவர்களில் முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உட்கட்சிப் பூசல்கள், பிளவுகள் போன்ற சோதனையான காலக்கட்டங்களிலும் அவர்கள் திமுக பக்கமே நின்றனர். ஆனால் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த சாதிக்பாட்சா பொருளாளராக இருந்ததோடு சரி! அதற்கப்புறம் அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட திமுகவில் உயர் பதவி அளிக்கப்படவில்லை. 

இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த வேலூர் முகமது சகி, நீலகிரி முபாரக், நெல்லை சித்திக் போன்றவர்களால் அதிகபட்சம் மாவட்டத் துணை செயலாளர், செயலாளர் வரை மட்டுமே போக முடிகிறது. அதைத் தாண்ட முடியவில்லை என்று வருத்தப்படுகிறார்கள். இனியாவது இஸ்லாமியர்களின் வருத்தத்தை தீர்ப்பாரா ஸ்டாலின்..?