வைகோவுக்கு ஒரே ஒரு ராஜ்யசபா சீட்! 40 தொகுதியிலும் அழச்சொல்லி ஸ்டாலின் உத்தரவு!

தி.மு.க. கூட்டணியில் பசை போன்று ஒட்டியிருக்கும் வைகோவின் சேவை தேர்தலுக்குத் தேவை என்று நினைத்து புதிய திட்டம் தீட்டியிருக்கிறார் ஸ்டாலின்.


நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று சீட் வாங்கி ம.தி.மு.க.வுக்கு கெத்து காட்ட வேண்டும் என்பது வைகோவின் ஆசை. ஆனால், ஸ்டாலின் திட்டமோ வேறு மாதிரி இருக்கிறது. இது வைகோவே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

ஆம், நாடாளுமன்றத் தேர்தலில் நாய் மாதிரி தெருத்தெருவாக அலையவேண்டாம். நிம்மதியாக 40 தொகுதிக்கும் போய் தி.மு.க.வுக்காக தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் அழுதுவிட்டு வாருங்கள். மக்கள் உச் கொட்டி ஓட்டுக்களை போடுவார்கள்.

அதற்குப் பரிகாரமாக நாடாளுமன்ற சீட் தந்துவிடுகிறேன். நீங்கள் கைகாட்டும் இருவருக்கு நாடாளுமன்ற சீட்டும் தருகிறேன் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் ஸ்டாலின். அதனால்தான் திருச்சியில் போட்டியிடுவதாக இருந்த முடிவை பின்வாங்கினாராம்.

இப்போது தி.மு.க.வில் கருணாநிதி இல்லை, வேறு சிறப்பான நட்சத்திர பேச்சாளர்களும் இல்லை. அதனால் வைகோவை சிறப்புப் பேச்சாளராக பயன்படுத்திக்கொள்ள ஸ்டாலின் திட்டம் போட்டிருக்கிறார். இப்படியொரு வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்காத வைகோ வாயெல்லாம் பல்லாக இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டாராம்.

அதேபோன்று அரசு முறை பயணமாக மோடி எப்போது தமிழகம் வந்தாலும், ‘கோ பேக் மோடி‘ என்று கறுப்புக்கொடி போராட்டம் தொடர்ந்து நடத்தவேண்டும் என்பதையும் ஒரு கோரிக்கையாக வைத்திருக்கிறாராம் ஸ்டாலின்.

இதற்கும் சம்மதித்துவிட்டார் வைகோ. அதனால், இனி ஒவ்வொரு தொகுதிக்காகவும் மேடையேறி கண்ணீர் சிந்த தயாராகிறார் தங்கநிகர் தலைவன் வைகோ. கண்ணீரைத் துடைக்க பெரியபெரிய துண்டு வாங்கி வையுங்கப்பா...

அதாவது பேசாமல் திமுகவில் சேர்ந்து விடுங்கள், ராஜ்யசபா எம்.பி ஆக்குகிறேன் என்று வைகோவிடம் சொல்லாமல் சொல்லியுள்ளார் ஸ்டாலின். இதற்கு வைகோ அளிக்கும் பதிலில் தான் அவரது அரசியல் எதிர்காலமே உள்ளது.